44வது வயதைத் தொடும் சூர்யா| கொண்டாட்டங்களை ஆரம்பித்த ரசிகர்கள்

  0
  32
  சூர்யா

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள்  ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகம் முழுவதும் செய்து வருகின்றனர்.

  suriya

  சமீபத்தில், சூர்யாவின் ‘புதிய கல்வி கொள்கை’ பற்றிய பேச்சு இந்தியா முழுவதுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. கமல், ரஜினி உட்பட திரையுலகிலும், அரசியல் வட்டாரங்களில் பலர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது பிறந்தநாளை கூடுதல் உற்சாகத்தோடு கொண்டாட தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

  suriya

  கட்-அவுட்களுக்கு பாலபிஷேகத்தோடு நின்று விடாமல், வழக்கமாக சூர்யாவின் எல்லா பிறந்த நாளுக்கும் நலதிட்ட உதவிகளையும் செய்து வரும் ரசிகர்கள் இந்த வருடமும் அதைக் கடைபிடிக்கிறார்கள்.  காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடும் நவரச நடிகராக இன்று பிரமாண்ட உருவம் எடுத்து நிற்கும் சூர்யாவின்  ரசிகர்கள், அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக பல

   

  suriya

  ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் ரத்த தானமும் உடல் உறுப்பு தானமும் செய்து வருகிறார்கள். இன்று, தன் மனைவி ஜோதிகா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சூர்யா. பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா!