4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் இந்தியாவில் அறிமுகம்

  6
  infinix

  இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  டெல்லி: இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போனை காட்டிலும் கொஞ்சம் மாறுபட்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. முழுவதும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரியர் மற்றும் செல்பி கேமரா இரண்டுமே 16 மெகா பிக்சல் ஆகும்.

  ரியல்மி யு1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  – 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

  ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர்

  – 4 ஜிபி ரேம்,  64 ஜிபி இன்டெர்னல் மெமரி

  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  டூயல் சிம் ஸ்லாட்

  ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

  ஆன்ட்ராய்டு ஒன் புரோகிராம்

  – 16 எம்.பி. பிரைமரி கேமரா, டுயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

  – 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

  – 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

  இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் போர்டக்ஸ் ரெட் மற்றும் சார்கோல் ப்ளூ ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற டிச.4-ஆம் தேதி ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வெளியாகிறது.