400 மாவட்டங்களில் கடன் மேளா! கடன் கொடுக்க தயாராகும் வங்கிகள்! வாங்க நீங்க ரெடியா?

  0
  4
  கடன் மேளா

  400 மாவட்டங்களில் கடன் மேளா நடத்தும்படி பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து வரும் அக்டோபர் 3ம் தேதி வங்கிகள் கடன் மேளா நடத்த உள்ளன.

  நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் 5 சதவீதமாக குறைந்தது. மேலும் வேலைவாய்ப்பு நிலவரமும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போதிய நிதிஉதவி இல்லாமல் தவித்து வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் இதுவரை 3 முறை துறைவாரியாக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளை அறிவித்து விட்டார்.

  நிர்மலா சீதாராமன்

  இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் நிர்மலாச சீதாராமன்- பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் சந்திப்பு நடந்தது. அந்த கூட்டத்தில், நிதிசந்தையில் பண புழக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது, பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 400 மாவட்டங்களில் 2 கட்டங்களாக லோன் மேளாவை வங்கிகள் நடத்த வேண்டும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

  மேலும், பொதுத்துறை வங்கிகள் ராம் பிரிவுக்கு (ரீடெயில், வேளாண் மற்றும் குறுசிறுநடுத்தர நிறுவனங்கள்) அதிக முக்கியத்துவம் கொடுத்து கடன் வழங்க வேண்டும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். வங்கிகள் வழங்கும் கடனின் வளர்ச்சியை அதிகரித்தால் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான நிதி கிடைப்பதோடு, வேலைவாய்ப்பும் பெருகும் என்ற கணக்கில் மத்திய அரசு லோன் மேளா நடவடிக்கையை மேற்கொள்ளும்படி பொதுத்துறை வங்கிகளை வலியுறுத்தி உள்ளது.