‘40% பள்ளி மாணவர்கள் கொரானாவால் பாதிப்பார்கள்… சத்துணவு நிபுணர் சத்தியராஜ் மகள் மன வேதனை 

  0
  2
  கொரோனா பாதிப்பு

  நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார் , .அந்த ஆராய்ச்சி முடிவில் கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண்கள் இரும்புச்சத்து குறைபாடுடன்  இரத்த சோகையோடு  இருப்பதைக் கண்டறிந்தார்.

  நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார் , .அந்த ஆராய்ச்சி முடிவில் கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண்கள் இரும்புச்சத்து குறைபாடுடன்  இரத்த சோகையோடு  இருப்பதைக் கண்டறிந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம்  பேசியபோது இந்த  இரும்புச்சத்து குறைபாட்டினை  அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்வோம் என்றனர்.

  sathyaraj-daughter

  ஆனால் திடீரென கொரானா காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால் , கார்ப்பரேஷன் பள்ளிகளின் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்கவில்லை  . இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா கூறுகையில் ,”இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகையை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது . நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு காரணமாக  ஒரு குழந்தைக்கு மோசமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும், இதன் விளைவாக குழந்தை கொரானா  மற்றும் பசியின்மை, தொற்றுநோய்கள் பரவலுக்கு ஆளாகக்கூடும். குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளுக்கு இரும்புச் சத்துக்களை இலவசமாக வழங்குவதன் மூலம் இரத்த சோகையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தால்  கொரானா மற்றும் பிற நோய்த்தொற்றுகளை எதிர்க்க அவர்களுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்திகிடைக்கும் “என்றார் .