4 மாசத்துல 9 நாடுகளுக்குச் சென்ற மோடி! 16 நாடுகளுக்கு சென்றுள்ள மந்திரி!

  5
   மோடி

  பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். வெளிநாட்டு பயணம் குறித்து அவர் அளித்திருந்த பதிலில், இந்த வருடம் கடந்த ஆகஸ்ட்  மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பிரதமர் மோடி 7 நாடுகளுக்கு பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், ரஷியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு அரசு முறையில் வெளிநாட்டு பயணமாக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். வெளிநாட்டு பயணம் குறித்து அவர் அளித்திருந்த பதிலில், இந்த வருடம் கடந்த ஆகஸ்ட்  மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பிரதமர் மோடி 7 நாடுகளுக்கு பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், ரஷியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு அரசு முறையில் வெளிநாட்டு பயணமாக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதே நான்கு மாத காலத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 நாடுகளுக்கும், துணை ஜனாதிபதி 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 16 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் 16 நாடுகளுக்கும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

  modi

  கடந்த செப்டம்பர் மாதம் 22ம்  தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் டெக்சாஸ் இந்திய மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டெக்சாஸ் இந்திய மன்றத்துக்கு மத்திய அரசு நிதி உதவி எதுவும் வழங்கவில்லை என்றும் அதே போல, இந்த நான்கு மாத காலங்களில் நம் நாட்டிற்கு சீன அதிபர் ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா உள்பட 14 நாட்டு தலைவர்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.