4 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண்: லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

  0
  5
  லேகா

  வாழ்க்கை  இப்படியே வறுமையில் போகிறதே… நம்ம வாழ்க்கையிலும் அதிர்ஷடம் அடிக்குமா?

  கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆரியநாடு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு லேகா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் விபத்து ஒன்றில் சிக்கியதால் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் லேகா குடும்பத்துடன் வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார். 

  money

  இந்நிலையில் வாழ்க்கை  இப்படியே வறுமையில் போகிறதே… நம்ம வாழ்க்கையிலும் அதிர்ஷடம் அடிக்குமா? என்று எண்ணிய லேகா, கேரள அரசு லாட்டரி சீட்டை  வாங்கியுள்ளார். உண்மையில் லேகாவுக்கு அதிர்ஷம் அடித்துள்ளது. ஆம்…லாட்டரியில் லேகாவுக்கு  சுமார் 60 லட்சம் விழுந்துள்ளது. 

  kerala

  இதுகுறித்து கூறியுள்ள லேகா, என்  கணவர் விபத்தில் சிக்கியதால் அவரால் வேலைக்கு போகமுடியவில்லை. இதனால் நாங்கள் கஷ்டப்பட்டு வந்தோம். தற்போது கிடைத்துள்ள  பணத்தை வைத்து  சிறிய வீடு கட்டுவேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.