4 நாளில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. 2,225 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்….

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் சென்ற வாரமும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 2,225 புள்ளிகள் குறைந்தது.

  ராம நவமியை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. தொற்று நோயான கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸால் உயிர்கள் ஒருபுறம் பலியாகி வரும் நிலையில், உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் அச்சம் நிலவுகிறது. ஒட்டு மொத்த அளவில் கொரோனா வைரஸால் இந்திய பங்குச் சந்தைகளில் சென்ற வார பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

  கொரோனா வைரஸ்

  நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.108.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.01 லட்சம் கோடியை இழந்தனர்.

  பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

  சென்ற வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,224.64 புள்ளிகள் குறைந்து 27,590.95 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 576.45 புள்ளிகள் வீழ்ந்து 8,083.80 புள்ளிகளில் நிலைகொண்டது.