4 நாளில் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு….. தீவிரமாக களத்தில் இறங்கிய மத்திய மற்றும் மாநில அரசுகள்..

  0
  1
  மருத்துவ பரிசோதனை

  கடந்த நாட்களில் மட்டும் புதிதாக ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

  உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் தீவிரவமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

  கொரோனா வைரஸ்

  நம் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்தது. மேலும், சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று நம் நாட்டில் புதிதாக 315 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

  சுகாதார பணியாளர்கள்

  இந்நிலையில் நேற்று மட்டும் நாடு முழுவதுமாக மொத்தம் புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதியானது. இதனையடுத்து நேற்று இரவு 11.45 மணி நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,996ஆக உயர்ந்தது. கடந்த நாட்களில் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.