4 தலைமுறை, 5 முதலமைச்சர்கள், 5000 நாடகங்கள், 60 ஆண்டு நடிப்பு – அவர் பெயர் ஆச்சி

  0
  17
  Manorama

  காமெடி கதாபாத்திரம் ஏற்றால், சிரிக்கவைக்காமல் போகமாட்டார். அம்மா/பாட்டி சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தால் உருகவைக்காமல் விடமாட்டார். எத்தனை படங்கள்? எத்தனை நடிகர்கள்? எத்தனை முதலமைச்சர்கள்? சிவாஜி, எம்ஜிஆர். தலைமுறையில் இருந்து, ரஜினி கமலின் 80களிலும், விஜய் அஜீத் என 90கள், அட இவ்வளவு ஏன் தனுஷ் சிம்பு தலைமுறைவரை எல்லாருக்கும் ஆச்சியாக இருந்தவர்.

  ஃபில்ம் ரோல் இல்லாமல்கூட 80களில் தமிழ்ப்படம் எடுத்திருக்கமுடியும், ஆச்சி என்னும் மனோரமா இல்லாமல் முன்னணி ஹீரோக்கள்  படம் எடுத்திருக்கவே முடியாது. அக்காலத்தில் எந்த‌ ஒரு குறிப்பிட்ட‌நடிகரும் எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் என்பதை அறிய, அவரவர் தனித்தனி வரலாறை புரட்ட தேவையில்லை. எத்தனை படத்தில் மனோரமா இருந்திருக்கிறார் என்று பார்த்தாலே போதும். மனோரமா நடித்தாலே ஹிட் அடிக்கும் என்பதல்ல, ஆனால் ஹிட் அடித்த படங்களில் எல்லாம் மனோரமா இருந்திருக்கிறார் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.

  Manorama

  கொங்கு பாஷையாகட்டும், சென்னை செந்தமிழாகட்டும், மதுரை வட்டார மொழியாகட்டும், அத்தனை வட்டார மொழியையும் அச்சுஅசலாக பேசுவதற்கு மனோரமாவிற்கு இணையாக ஒரு நடிகையை சுட்டிகாட்ட முடியாது. காமெடி கதாபாத்திரம் ஏற்றால், சிரிக்கவைக்காமல் போகமாட்டார். அம்மா/பாட்டி சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தால் உருகவைக்காமல் விடமாட்டார். எத்தனை படங்கள்? எத்தனை நடிகர்கள்? எத்தனை முதலமைச்சர்கள்? சிவாஜி, எம்ஜிஆர். தலைமுறையில் இருந்து, ரஜினி கமலின் 80களிலும், விஜய் அஜீத் என 90கள், அட இவ்வளவு ஏன் தனுஷ் சிம்பு தலைமுறைவரை எல்லாருக்கும் ஆச்சியாக இருந்தவர்.

  Manorama

  சினிமா என்றாலே ஆண்கள் கோலோச்சுவது அன்றும் இன்றும் புதிதான செய்தியல்ல. ஆனால், நான்கைந்து தலைமுறை நடிகர்கள் அனைவரின் மரியாதையையும் ஒருங்கே பெற்ற மற்றொரு நடிகை தமிழில் இல்லை. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இவ்வளவு ஏன் சிங்கள் ஆறு மொழிகளில் பேசி நடித்திருக்கிறார்.கவியரசர் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டு சினிமாவுக்கு அறிமுகப்படுத்த ஜில்ஜில் ரமாமணிக்கு இன்று பிறந்த நாள். என்ன வாழ்வாங்கு வாழ்ந்த கதை ஆச்சியுடையது. அவரின் இறுதி நாட்களில் அவருக்கு பாராட்டுவிழா நடத்தி நடிகர் சங்கம் கவுரவித்தது சாலபொருத்தம்.