4 கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே நாட்ச் கொண்ட ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

  10
  huawei

  இந்தியாவில் ஹுவாய் ஒய்9 2019 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  டெல்லி: இந்தியாவில் ஹுவாய் ஒய்9 2019 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ அம்சம்) கொண்ட மொத்தம் 4 கேமராக்களை உடைய புதிய ஹுவாய் ஒய்9 2019 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 3D ஆர்க் டிசைன் இடம்பெற்றுள்ளது. கேமராவை இயக்கும்போது சுமார் 500 விதமான ஸீன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனில் ஜிபியு டர்போ தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய அம்சங்களும் ஹுவாய் ஒய்9 ஸ்மார்ட்போனில் உள்ளன.

  மேலும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், 16 எம்.பி + 2 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி + 2 எம்.பி இரட்டை செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் இந்த புதிய ஹுவாய் ஒய்9 2019 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு ஆகிய இருவிதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.15,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் ஜன.15-ஆம் தேதி பிரத்யேகமாக இதன் விற்பனை தொடங்குகிறது.