“35 வயது இளைஞருக்கும் 12 வயது மகளுக்கும் திருமணம்”: கணவன் கொடுத்த புகாரில் மனைவி அதிரடி கைது!

  0
  10
  கட்டாய திருமணம்

  இதற்கு செந்தில்குமாரின் தம்பிகள் பாபு, திருமுருகன், மதி மற்றும் இவர்களின்  மனைவிகள்  உதவி செய்துள்ளனர். 

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் 12 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் ரத்தினம் 35 வயதாகும் தனது அண்ணன் மகன் செந்தில் குமாருக்கு தனது 12 வயது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கு செந்தில்குமாரின் தம்பிகள் பாபு, திருமுருகன், மதி மற்றும் இவர்களின்  மனைவிகள்  உதவி செய்துள்ளனர். 

  ttn

  இதுகுறித்து சிறுமியின் தந்தை பால்ராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். இதனிடையே வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் தலைமறைவானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

  ttn

  அந்த வகையில் 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த  செந்தில்குமார் மற்றும் சிறுமியின் தாய் ரத்தினம் வேறொரு வழக்குக்காக விசாரணைக்கு வந்தபோது போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள்  ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்  சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.