35 கிலோ காசு சேர்த்த மகன்! தாய்க்கு சூப்பரான பரிசு! நெகிழ்ந்த கடைக்காரர்!

  0
  1
  ராம்சிங்

  ஜோத்பூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், அவனது 5 வயதில் இருந்து அம்மாவின் பிறந்தநாள் பரிசுக்காக பணம் சேர்க்க துவங்கியுள்ளான்.

  விழி மூடாமல் நம்மை பாதுகாத்து, வளர்த்து, ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த தாய்க்கு நீங்கள் இதுவரையில் கொடுத்த பரிசுகளில் எது சிறந்ததாக இருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி பணம் சம்பாதிக்க துவங்கியதும் என்ன வேண்டுமானாலும் வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனால், எந்த வயதில் இருந்து தாய்க்கு பரிசளிப்பதற்காக பணம் சேர்க்க ஆரம்பித்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

  ram singh

  ஜோத்பூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், அவனது 5 வயதில் இருந்து அம்மாவின் பிறந்தநாள் பரிசுக்காக பணம் சேர்க்க துவங்கியுள்ளான். தற்போது ஜோத்பூரில் கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் சிறுவன் ராம்சிங், இவனது தாயார் பப்பு தேவி சிறுவயதில் கொடுக்கும் சில்லறை காசுகளை வீட்டில் பத்திரமாக சேர்த்து வைக்கத் துவங்கியுள்ளான். தற்போது பப்பு தேவியின் பிறந்தநாளுக்கு பரிசாக ப்ரிட்ஜ் வாங்கித் தர முடிவு செய்து, தனது சேகரிப்பில் இருந்த மொத்த சில்லறைகளையும் எண்ணத் துவங்கினான் ராம்சிங். மொத்தம் 35 கிலோ எடையில் 13 ஆயிரத்து 500 ரூபாய் சேமிப்பில் இருந்துள்ளது. அதை அப்படியே மூட்டையாக கட்டிக் கொண்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கடைக்குச் சென்று ப்ரிட்ஜ் விலையைக் கேட்டிருக்கிறான். இவனது தாய் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்த கடைக்காரர், ப்ரிட்ஜின் விலையான 15,500 ரூபாயில் ரூ.2000 யை தள்ளுபடி செய்து ப்ரிட்ஜைக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.