33ஜி.பி.,டேட்டா…அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்…100 எஸ்.எம்.எஸ்; புதிய சலுகைகளுடன் களமிறங்கும் ஐடியா

  0
  5
  idea

  33ஜி.பி.,டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ் என ஏர்டெல், ஜியோவிற்கு போட்டியாக ஐடியா செல்லுலார் தற்போது களமிறங்கியுள்ளது

  சென்னை: 33ஜி.பி.,டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ் என ஏர்டெல், ஜியோவிற்கு போட்டியாக ஐடியா செல்லுலார் தற்போது களமிறங்கியுள்ளது.

  ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள ஐடியா செல்லுலார் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.149-க்கு பயனர்கள் 33ஜி.பி.,டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ்-களை 28 நாட்களுக்கு பெற முடியும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் வழங்கப்படுகிறது.

  இதே விலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில், பயனர்கள் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்-களை 42 நாட்களுக்கு பெற முடியும். அதேபோல், ஏர்டெல் வழங்கும் இதே விலை சலுகையில், தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்-களை 28 நாட்களுக்கு பெற முடியும்.

  ஐடியா தற்போது அறிவித்திருக்கும் இந்த புதிய சலுகை முதற்கட்டமாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அறிமுகமாகியுள்ளது.