31 நாளில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி….

  0
  3
  தங்க கட்டிகள்

  கடந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டுக்குள் சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவில்தான் நடைபெறுகிறது. அதனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியால் நாட்டின் அன்னிய செலாவணி அதிகளவில் வெளியேறுகிறது. அதனால் மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தங்கம் இறக்குமதி தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

  தங்க பிஸ்கட்

  தற்போது தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. இதனால் தங்கம் இறக்குமதி குறையும் என்று பார்த்தால் வழக்கம்போல் கூடித்தான் இருக்கு. கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். 

  சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி

  கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 1,100 கோடி டாலராக (சுமார் ரூ.77 ஆயிரம் கோடி) குறைந்துள்ளது. அந்த மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 1.11 சதவீதம் குறைந்து 2,638 கோடி டாலராவும் ( சுமார் ரூ.1.84 லட்சம் கோடி), சரக்குகள் இறக்குமதி 16.31 சதவீதம் குறைந்து 3,739 கோடி டாலராகவும் (சுமார் ரூ.2.61 லட்சம் கோடி) இருந்தது.