3,000 ஊழியர்களை அனுப்ப முடிவு! டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி!

  0
  2
  டாடா ஸ்டீல் நிறுவனம்

  உலகளவில் ஸ்டீல் பொருட்களுக்கான சந்தை பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்த துறையில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக டாட்டா ஸ்டீல் நிறுவனம் அதன் ஐரோப்பா கிளையில் பணிபுரிந்து வருபவர்களில் 3,000 பேர் பணி நீக்கம் செய்யலாம் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உலகளவில் ஸ்டீல் பொருட்களுக்கான சந்தை பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்த துறையில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக டாட்டா ஸ்டீல் நிறுவனம் அதன் ஐரோப்பா கிளையில் பணிபுரிந்து வருபவர்களில் 3,000 பேர் பணி நீக்கம் செய்யலாம் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஐரோப்பாவில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகிறார்கள். டச்சு ஊழியர்களின் கூட்டத்தை தொடர்ந்து 3000 பேரின் வேலை குறைக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.  நாளுக்கு நாள் ஸ்டீல் துறை பின்னடைவை சந்திப்பதையே இது குறிக்கிறது. 

  tata steel

  ஐரோப்பாவில் ஸ்டீல் தயாரித்தல், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி, அதிக அளவிலான செலவினங்கள் என்று இந்த துறையின் மந்தநிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கிடையே நடந்து வரும் பொருளாதார சர்ச்சைகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஐரோப்பாவைப் போன்றே மற்ற நாடுகளிலும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. வழக்கமாக மந்த நிலை ஏற்படும் போது நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரையில் ஆலைகளை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை.

  job

  ஆனால் தற்போது ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால், டாடா நிறுவனம் அதன் ஆலைகளை குறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக ஊழியர்கள் கவலைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் இந்தியா நிறுவனம் 2020ம் நிதியாண்டிற்கான மூலதனத்தை 12,000 கோடிகளில் இருந்து 8,000 கோடிகளாக குறைத்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவிலும் ஊழியர்கள் நீக்கம் 20 முதல் 25 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.