30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான முடக்கம்…. பஞ்சாப், மகாராஷ்டிராவில் ஊரடங்கு

  0
  3
  மாவட்டங்கள் முடக்கம்

  நம் நாட்டின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான முடக்கம் நடைமுறையில் உள்ளது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் அதன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. நேற்று இரவு 10.30 மணி நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468ஆக உயர்ந்தது.

  சுகாதார பணியாளர்கள்

  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 548 மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு சில நடவடிக்கைகளை முடக்குவதாக அறிவித்தது.

  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

  கொரோனா வைரஸ் பரவுவதால், பார்க் சர்க்கஸ் உள்பட கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தை போராட்டக்காரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.