3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை… ரூ.1,565 கோடி லாபம்….. கலக்கும் மாருதி சுசுகி…

  0
  4
  மாருதி சுசுகி

  மாருதி சுசுகி நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,565 கோடி ஈட்டியுள்ளது.

  நாட்டின் மிகப்பெரிய (மதிப்பு அடிப்படையில்) கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா உள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது இந்த நிதியாண்டுக்கான 3வது காலாண்டுக்கான (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் ரூ.1,565 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,489 கோடியை மட்டுமே ஈட்டியிருந்தது.

  மாருதி சுசுகி

  2019 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.20,707 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம 4.37 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் (2018 அக்டோபர்-டிசம்பர்) காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.

  மாருதி சுசுகி செலிரியோ

  கடந்த ஆண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு இருண்ட காலமாக இருந்தது. ஏனென்றால் சென்ற ஆண்டில் ஒரு சில மாதங்களை தவிர பெரும்பாலான மாதங்களில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபமும் உயர்ந்துள்ள தகவல் வாகன துறைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.