3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை!

  0
  2
  மாணவி

  அந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் நான் தொடர்ந்து  தண்டிக்கப்பட்டு வருகிறேன். நான் இதுவரை மன்னிக்கப்படவில்லை.

  உத்தரப்பிரதேசம்: வகுப்பு தோழிகள்  தன்னை  புறக்கணித்ததால் பள்ளி மாணவி ஒருவர் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகானில்  ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி 
  ஒன்று இயங்கி வருகிறது.பள்ளியின் விடுதியில் 11 ஆம் வகுப்பு மாணவி  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் மாணவியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  suicide

  இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், அந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் நான் தொடர்ந்து  தண்டிக்கப்பட்டு வருகிறேன். நான் இதுவரை மன்னிக்கப்படவில்லை. தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னை விரும்பியவர்கள் என்னைவிட்டு விலகினார்கள். என் தோழிகள் என்னை நம்பாவிட்டால் பிறகு எப்படி 12 ஆம் வகுப்பு வரை அவர்களுடன் இங்குப் படிக்க முடியும்? அதனால் தற்கொலை செய்கிறேன்’ என்று எழுதியிருந்தார்.

  up

  இதுகுறித்து மாணவி ஒருவர் கூறும் போது, மூன்று ஆண்டுக்கு முன் இந்த மாணவி  வேறொரு மாணவியின் தின்பண்டத்தைத் திருடிவிட்டார். இதனால் சீனியர் மாணவிகள் 48 பேர் அவரை அடித்தார்கள்’ என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.