3 ஆண்டுகளாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்; சினிமா வாய்ப்பு தேடும் பெண்களே எச்சரிக்கை?!

  0
  1
  Sexual harassment

  பெங்களூருவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போது ஒருவன் தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணிடம் பேசி மொபைல் நம்பரை வாங்கியிருக்கிறான். சில நாட்கள் பேசிய பின்பு, கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆடிசனுக்கு (ஒத்திகை) அலைத்திருக்கிறான்.

  திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து 3 ஆண்டுகளாக மிரட்டி ஆசைக்கு இணங்கவைத்த போலி தயாரிப்பாளர் கைது.

  திரைத்துறை பெண்களுக்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தரும் துறையாக மாறி வருகிறது. சினிமாவில் வாய்ப்பு தேடித்திரியும் பெண்களை ஏமாற்ற ஒரு கும்பல் எப்போதும் ரெடியாக இருக்கிறது. அதேசமயம் திரைத்துறை சார்ந்த பிரபலமானவர்களும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சிக்காமல் இல்லை. திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது பாலியல் கொடுமைகள்.

  sexual violence

  #Metoo இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சம் பெறத் துவங்கியது. இதில் சினிமாத்துறையை சேர்ந்த முக்கியமான நபர்கள் பலர் சிக்கினர். இந்நிலையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த பெண் ஒருவரை, தயாரிப்பாளர் என பொய் சொல்லி ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளான்.

  பெங்களூருவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போது ஒருவன் தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணிடம் பேசி மொபைல் நம்பரை வாங்கியிருக்கிறான். சில நாட்கள் பேசிய பின்பு, கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆடிசனுக்கு (ஒத்திகை) அலைத்திருக்கிறான். அதை நம்பி சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியிருக்கிறான். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் உன் குடும்ப மானம் போய்விடும், உன்னை யாரும் திருமணம் செய்யமாட்டார்கள் என மிரட்டல் விடுத்து தன் ஆசைக்கு இணங்கவைத்துள்ளான்.

  rape

  கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து தன் இச்சைக்கு அப்பெண்ணை பயன்படுத்தியிருக்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த கொடுமையை தாங்க முடியாத அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளார். விசாரணையில் அவன் தயாரிப்பாளர் என பொய் சொல்லியது தெரிய வந்திருக்கிறது.

   

  இதையும் வாசிங்க

  மீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்!