28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – சந்தோஷ் சிவன் கூட்டணி

  0
  1
  ss

  ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  சென்னை: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ‘தளபதி’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இதன் ஒளிப்பதிவு.

  rajini

  தளபதி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன், இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இந்நிலையில் இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடம் மீண்டும் பணிபுரிய உள்ளார்.

  rajini

  ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து சந்தோஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “இறுதியாக, தளபதி படத்திக்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணிபுரியும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து உற்சாகமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.