274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு…. 4 நாட்களில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு…

  0
  1
  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

  4.1 நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. தப்லீக் ஜமாஅத் மாநாடு நிகழ்வு நடைபெறவில்லை என்றால் 7.4 தினங்களில்தான் 2 மடங்கை எட்டி இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதார துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: 4.1 தினங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தப்லீக் ஜமாஅத் மாநாடு நிகழ்வு நடைபெறவில்லை என்றால் 7.4 தினங்களில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்து இருக்கும்.

  உணவு முகாம்கள்

  நாடு முழுவதுமாக மொத்தம் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. லாக்டவுன் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலவரம் திருப்தி அளிப்பதாக உள்ளது. நாடு முழுவதுமாக அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தம் 27,661 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைத்துள்ளன. இதில் 12.5 லட்சம் தஞ்சம் அடைந்துள்ளனர். 

  தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்

  மேலும் 19,460 உணவு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்களில் 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) இறக்குமதி செய்யப்பட்டதால் முதலில் பற்றாக்குறை நிலவியது. தற்போது உள்நாட்டில் உற்பத்தியாளர்கள் அதன் உற்பத்தியை தொடங்கி விட்டனர். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் பி.பி.பி. இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்