2500 கோடி கணக்கில் வராத சொத்துகள்; 800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: விவி மினரல்ஸ் ரெய்டு ஓவர்!

  0
  5
  vaikundarajan

  விவி மினரல்ஸ் நிறுவனங்களில் நடைபெற்று வந்த வருமானவரித் துறை சோதனை 6 நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

  சென்னை: விவி மினரல்ஸ் நிறுவனங்களில் நடைபெற்று வந்த வருமானவரித் துறை சோதனை 6 நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

  இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் வைகுண்டராஜன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் சொத்துக்களை வெளி நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

  அதனடிப்படையில் கடந்த 25-ஆம் தேதி முதல் விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்றபட்ட இடங்களில் வருமான வரித்துறை போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

  அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் விவி மின்ரல்ஸ் ஊழியர்களின் வங்குக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

  இந்நிலையில், ரூபாய் 800 கோடிக்கு மேல் விவி மினரல்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும், 1800 கோடி முதல் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் இருப்பதாகவும், 8 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

  அதுமட்டுமின்றி, வெளி நாடுகளில் விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமாக 8 சுரங்கங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.