25ம் தேதி ரஜினி இறங்கி அடிக்கப்போறதை இந்த வாட்டி நம்பித்தாங்க ஆகணும்

  0
  2
  ரஜினி

  தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ரஜினி இம்முறை கண்டிப்பாக அரசியல் பிரவேசத்தை அறிவித்தே தீருவார் என்ற செய்தி முதல் முறையாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.

  தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ரஜினி இம்முறை கண்டிப்பாக அரசியல் பிரவேசத்தை அறிவித்தே தீருவார் என்ற செய்தி முதல் முறையாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. யெஸ் இன்று மதியம் தன் போயஸ் தோட்ட இல்லத்தில் வேலூர் தொகுதி வேட்பாளரும் பிரபல கல்வித்தந்தையும் வருங்கால ரஜினி கட்சியின் தூண்களில் ஒருவருமான ஏ.சி. சண்முகத்தை சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்.

  rajini and shanmugam

  மும்பையில் நடந்த ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து தற்செயலாக ஓய்வெடுப்பது 15 நாட்கள் பிரேக் விட்டிருக்கும் ரஜினி வந்த நாள் முதல் தினமும் மன்ற நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஆலோசகர்கள் என்று ஒவ்வொருவராகச் சந்தித்து வருகிறார். அச்சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்த அனல் பறக்கும் கருத்துகள் ரஜினிக்குப் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொருவரிடமும் நாம இந்த நேரத்துல வர்றது சரியா இருக்கும்ல? என்ற கேள்வியைத் தவறாது வைக்கும் ரஜினி 25ம் தேதி தனது எண்ட்ரியை அறிவிப்பதில் மிக உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

  rajni and a.c.shanmugam

  அதன் தொடர்ச்சியாக இன்று ஏ.சி.சண்முகத்துடனான சந்திப்பு நடந்திருக்கிறது. ரஜினியை அடுத்த எம்.ஜி.ஆர் என்று புகழ்ந்து வரும் ஏ.சி. சண்முகம் தற்போதைக்கு அ.தி.மு.க.கூட்டணியில் இருந்தாலும் ரஜினி கட்சியின் ‘பொருளாலர்’ அவர்தான் என்பது ஊரறிந்த உண்மை. அவருடன் சுமார் ஒர் மணி நேரத்துக்கும் மேலாக உரையாடிய ரஜினி எடப்பாடி ஆட்சியில் நீடிப்பாரா என்பது குறித்துச் சொன்ன தகவலுக்கு அவசரமாக ஸ்வீட் வரவழைத்துக்கொடுத்தாராம்.