22 மொழிகளில் தாய் மொழி தின வாழ்த்து கூறி அசத்திய வெங்கையா நாயுடு!

  0
  5
  Venkaiah Naidu

  சர்வதேச தாய் மொழி தினத்தையொட்டி 22 மொழிகளில் தன்னுடைய வாழ்த்துக்களைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.இன்று சர்வதேச தாய் மொழி தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடந்த சர்வதேச தாய் மொழி தின விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று பேசினார்.

  சர்வதேச தாய் மொழி தினத்தையொட்டி 22 மொழிகளில் தன்னுடைய வாழ்த்துக்களைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
  இன்று சர்வதேச தாய் மொழி தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடந்த சர்வதேச தாய் மொழி தின விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று பேசினார். அப்போது,தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் என 22 மொழிகளில் அவர் சர்வதேச தாய்மொழி தின விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

   

   

  பின்னர் அவர் பேசுகையில், “தாய் மொழிகளை பாதுகாத்து ஊக்குவிக்கும்போது, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியை வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் பிற மொழிகளை கற்கவும் முன்வர வேண்டும். இந்தியாவில் 19500க்கும் மேற்பட்ட மொழிகளும், கிளை மொழிகளும் தாய்மொழியாக பேசப்படுகிறது. இந்திய மொழிகள் அவற்றின் அறிவியல் பூர்வமான அமைப்பு மற்றும் ஒலி, சிக்கலற்ற எழுத்துமுறைகள் மற்றும் தெளிவான இலக்கிய விதிகளுக்காக எப்போதும் கொண்டாடப்படுகின்றன” என்றார்.