21 வயசுல நீதிபதி!  இந்தியாவின் இளம் நீதிபதி இவர் தான்! 

  0
  11
  மயங்க் பிரதாப் சிங்

  நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்த பட்ச வயதாக இதுவரையில் 23 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ராஜஸ்தான் அரசு நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை 21ஆக குறைத்திருந்தது.

  நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்த பட்ச வயதாக இதுவரையில் 23 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ராஜஸ்தான் அரசு நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை 21ஆக குறைத்திருந்தது. இதையடுத்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங் எனும் இளைஞர் நீதித் துறை தொடர்பான தேர்வை எழுதி, நாட்டின்  இளம் நீதிபதியாக 21 வயதில் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். 

  pratap singh

  மயங்க் பிரதாப், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் எல்.எல்.பி., படிப்பை முடித்துள்ளார்.  அதன் பின்னர் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வை எழுதிய அவர், அந்த தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார்.  இதன் மூலம், விரைவில் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் மயங்க் பிரதாப்.