21 நாள் முடக்கம் ஏன்? கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதற்கு ஆதாரம் இல்லை….. பிரசாந்த் கிஷோர்.

  0
  4
  பிரசாந்த் கிஷோர்

  21 நாள் நாட்டை முடக்கினால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

  பல கட்சிகளின் தலை எழுத்தை மாற்றி எழுதும் பிரம்மாவாக விளங்குகிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். தி.மு.க. இவரை நம்பிதான் அடுத்த சில ஆண்டுகளில் வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. பிரசாந்த் கிஷோருக்கும், பா.ஜ.க.வுக்கும் ஏதாவது உள்குத்து இருக்கிறது போல் தெரிகிறது. தொடர்ந்து அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார்.

  பிரதமர் மோடி

  கொரோனா வைரஸை கட்டுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் முடக்கத்தை தற்போது பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக கூறுகையில், இந்தியாவை முடக்கும் முடிவு சரியானதாக இருக்கலாம் ஆனால் 21 நாட்கள் என்பது கொஞ்சம் அதிகம். போதுமான பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் இல்லாமல் 21 நாள் முடக்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

  21 நாள் முடக்கம்

  கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க அதிகாரிகளின் தயார்நிலை தடுமாற்றமாக உள்ளது. அதேவேளை மோசமான நிறைவேற்றப்பட்ட முடக்கம் அதன் இலக்கை அடையவில்லை என்றாலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை நிச்சயம் சிதைத்து விடும் என தெரிவித்தார். அதேசமயம் பயோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் ஷா கூறுகையில், அரசு சரியானதை செய்துள்ளது. அறிவியில் ரீதியாக உங்களுக்கு 3 வாரங்கள் தேவை என பிரதமர் மோடியின் 21 நாள் முடக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.