21 நாள்களுக்கு வீடுகளில் முடங்கி இருங்கள்- கோலி வேண்டுகோள்

  0
  3
  விராட்கோலி

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டவாறு நாட்டு மக்கள் அனைவரும் 21 நாள்களுக்கு வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டிய நேரமிது. ஒற்றுமை உணர்வுடன் இருந்து சமுக விலகலை பின்பற்றவேண்டும்” என தெரிவித்துள்ளார்.