21 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்படுமா?

  0
  1
  passenger trains

  21 நாள் ஊரடங்கு முடிந்த பிறகு பயணிகள் ரெயில் சேவை தொடங்குமா என்பது பற்றி ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

  டெல்லி: 21 நாள் ஊரடங்கு முடிந்த பிறகு பயணிகள் ரெயில் சேவை தொடங்குமா என்பது பற்றி ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

  இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதில் 68 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் மிகவும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகின்றனர்.

  ttn

  இந்த நிலையில், 21 நாள் ஊரடங்கு முடிந்த பிறகு பயணிகள் ரெயில் சேவை தொடங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ஊரடங்குக்கு பிறகு வரும் நாட்களுக்கான ரெயில் முன்பதிவுகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

  இந்த நிலையில், இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையிலேயே பயணிகள் ரெயில் சேவை தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.