2020 ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணை – பிசிசிஐ அதிகாரப்பூர்வ வெளியீடு

  0
  8
  ipl 2020

  2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

  மும்பை: 2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

  13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மேலும் லீக்  போட்டிகள்  44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான லீக் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும். இரண்டு போட்டிகள்  நடக்கும் நாட்களில் மாலை 4 மணிக்கு முதல் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் சென்னையில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.