2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு

  0
  13
  US Open 2020

  2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நியூயார்க்: 2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இந்தாண்டு ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை பிரிட்டனில் நடைபெறவிருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  USA Open 2020

  இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி திட்டமிட்டபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கும் என்று அமெரிக்க டென்னிஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது அமெரிக்காவில் அதிகளவில் இருந்தாலும் டென்னிஸ் தொடரை நடத்துவதற்கு உண்டான திட்டங்களை கைவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.