2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை! ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு! உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்

  0
  1
  உச்ச நீதிமன்றம்

  2016ல் காஷ்மீரில் 3 மாதம் தகவல்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டபோது யாரும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை நாடவில்லை. ஆனால் இப்பம் கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கூறினார்.

  ஜம்மு அண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது, இயக்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் ஆகியவற்றுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை செய்தது. 

  காஷ்மீர்

  அப்போது  மத்திய அரசு மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் அரசுகளின் சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் தஸ்கர் மேத்தா ஆகியோர், 2016ல் புர்ஹான் வானி என்டர்கவுன்டரில் கொல்லப்பட்ட போது அங்கு 3 மாதம் தகவல்தொடர்பு முடக்கப்பட்டது. அப்போது யாரும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை நாடவில்லை. ஆனால் இப்போது கேள்வி கேட்டுள்ள மனுக்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தனர் கட்டுபாடுகள் விதிக்கவில்லை என்றால் காஷ்மீர் நிலவரம் மோசமாகவிடும். கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

  ரஞ்சன் கோகாய்

  இதனையடுத்து ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தேசத்தின் நலம், உள் பாதுகாப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அங்கு இயல்பு வாழ்க்கையை மீட்டமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மக்கள் மருத்துவமனை பயன்படுத்தும் வகையிலும்,  பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிலையங்கள் மற்றும் அரசு போக்குவரத்தை இயல்பாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

  காஷ்மீர்

  உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களின் மீதான அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தவுடன், மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டது.