2.0 மேனியா: ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றிய ரஜினி ரசிகர்

  0
  4
  2point0

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் தாக்கத்தால் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றி அசத்தியுள்ளார்.

  சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் தாக்கத்தால் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றி அசத்தியுள்ளார்.

  லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

  இப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பேர்ட் மேன்’ கெட்டப்பில், மொபைல் போன்களை வைத்து தனது ஆட்டோவை அலங்காரப்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.