2-வது டி20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தல் பேட்டிங் – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது இந்தியா!

  0
  2
  kl rahul

  இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியை வென்று தொடரில் 2-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

  ஆக்லாந்து: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியை வென்று தொடரில் 2-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

  நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

  india

  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 33 ரன்களும், டிம் செய்பர்ட் 33 ரன்களும், காலின் முன்ரோ 26 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளும், சிவம் துபே, பும்ரா, ஷர்துள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  kl rahul

  இதையடுத்து 133 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பில் தேவையான ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் அடித்தனர்.

  இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 2-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி வருகிற 29-ஆம்தேதி ஹாமில்டனில் உள்ள செடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.