2 மாத நெட்பிளிக்ஸ் பிரீமியம் இலவசத்தைப் பெறுங்கள்! இணையத்தில் உலாவரும் வதந்தி!!… எச்சரிக்கை

  0
  1
  நெட்பிளிக்ஸ்

  உலகின் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவிலும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி ஆழமாக வேரூன்றியுள்ளது.

  ttn

  இந்நிலையில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸையும் கொரோனா வைரஸ் சும்மா விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் திரையரங்கு மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதால், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தின் வியாபாரம் அமோகமாக அதிகரித்துள்ளது.

  Netflix

  இதற்கிடையில் தனிமைமையிலிருக்கும் உங்கள் பொழுதை நெட்பிளிக்சுடன் கழியுங்கள் என ஒரு மெசேஜ் உலாவருகிறது. அதாவது ஊரடங்கு உத்தரவால் 2 மாதங்களுக்கு நெட்பிளிக்ஸ் பிரீமியம் இலவசம்.. 60 நாட்களுக்கு இலவசமாக நெட்பிளிக்ஸை பயன்படுத்துங்கள் என்ற அந்த குறுஞ்செய்தி முற்றிலும் வதந்தி என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் அந்த மெசேஜூடன் வரக்கூடிய லிங்கை கிளிக் செய்யாதீர்கள் அதன்மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என தகவலையும் தெரிவித்துள்ளது.