2 புதிய யூனியன் பிரதேசங்கள் உதயம்: ஜம்மு காஷ்மீர், லடாக் துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு..!

  0
  10
  துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு

  நிர்வாக வசதிக்காகக் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

  ஜம்மு காஷ்மீருக்குக் காலம் காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை விளக்கும் பிரிவு370க்குத் தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காகக் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. அதன் படி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. 

  Union territories

  இதற்கான சட்டம், அதாவது காஷ்மீர் சீரமைப்பு சட்டம் 2019 நேற்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இன்று முதல் இந்தியா 28 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட நாடாக மாறியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கொண்டதாகவும், லடாக் சட்டப்பேரவை இன்றியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Governors

  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்முவும், லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூரும் இன்று திரிசூரில் உள்ள சிந்து சமஸ்கிருத அரங்கில் பதவியேற்றனர். புதிய யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்குக் காஷ்மீர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.