2 நிமிடப்பேட்டி- திமுக-திகவினரை 2 நாட்களாக தூங்கவிடாத ரஜினி… ஆர்ப்பரிக்கும் ஆதரவு..!

  0
  8
  ரஜினிகாந்த்

  ரஜினியை பற்றி இதுவரை பத்திரிக்கைகளில் வந்த கிசுகிசுக்கள் உண்மையா என்று இனி யாரும் உறுதி செய்ய தேவை இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பரப்பலாம்.

  பெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் மறுத்துவிட்ட நிலையில் நேற்று காலை முதல் திமுக- திக கட்சியினர் சமூகவலைதளங்களின் புலம்பித் தீர்த்து வருகின்றனர். 

  #சூப்பர்சங்கிரஜினி #மெண்டல்ரஜினி #ரஜினியாவது_மயிராவது என்கிற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கீழ்த்தரமாக ரஜினியை விமர்சித்து வருகின்றனர். 

  ’’ரஜினியை பற்றி இதுவரை பத்திரிக்கைகளில் வந்த கிசுகிசுக்கள் உண்மையா என்று இனி யாரும் உறுதி செய்ய தேவை இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பரப்பலாம். கேட்டால் பத்திரிக்கையில் வந்ததைத்தான் சொல்கிறோம் என்று பதில் சொல்லலாம்’’ எனப் புலம்பி வருகின்றனர்.

  Rajinikanth

  அதேநேரத்தில் ரஜினிக்கு ஆதரவாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.  மாரிதாஸ் தனது பதிவில், ‘’ இதுவரை திமுக திக என்ன என்ன விதமெல்லாம் இந்துக்களை அவமானம் செய்தார்கள் என்று ஒவ்வொரு இந்துவிற்கும் எடுத்துச் சொல்லி விசயத்தைப் புரியவைக்க வேண்டியது நம் கடமை. 

  2 நிமிட பேட்டி நாள் முழுவதும் திமுக -திக கூட்டத்தையே வச்சி துவைக்கும் தமிழக மக்கள். அனைத்து பக்கமும் ஆதரவு. 1996ல் மட்டுமல்ல இன்றும் தமிழக மக்களின் மனதில் பிடித்த விசயம் ரஜினி. ஏன் என்றால் ஜாதி மத மொழி இனம் தாண்டு மக்களை இணைக்கும் அந்த அற்புதம் ரஜினி.

  Rajinikanth

  அனைத்து ஆன்மீக நம்பிக்கையை மதிக்க வேண்டும் ஆனால், திமுக செய்வது பச்சை துரோகம் இந்துகளுக்கு. ரஜினி சார் சொல்லிவிட்டார் “எவரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது”. சூப்பர். இங்கே மிரட்டி அரசியல் செய்யலாம் என்று நினைத்த திமுக திக கூட்டத்திற்குச் சரியான பதிலடி.

  periyar

  ஆன்மீக அரசியல் தொடர்ங்கிவிட்டது. இனி முழுமையாக ரஜினி அவர்களுடன் நிற்க வேண்டியது அனைவரது கடமை. ராமனை செருப்பால் அடிப்பபேன், சிவனை முருகனை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும் அனைத்து திமுக,திகவினர் அது வீரமணி, சுபவீ யாராக இருந்தாலும் அவர்களையும் இந்துகள் திருப்பி செருப்பால் அடிக்கலாம். தவறில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.