2 சதவிகித ஓட்டுதான் இருக்குன்னா,ஏன் எங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறீங்க! நேற்றைய பிரேக்கிங் நியூஸை பிரேக் பண்ணிய கேப்டன் வாரிசு !?

  0
  4
  விஜய பிரபாகரன் (கோப்புப்படம்)

  தே.மு.தி.க.வின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

  தஞ்சாவூர்: தே.மு.தி.க.வின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

  எல்லா கட்சிகளிலும், தலைமையின் முடிவையம் கருத்துக்களையும் தாண்டி  அதிரைக்கு எதிராக சிலர் பேசி வருவார்கள்.உதாரணத்திற்கு  சுப்பிரமணிய  சுவாமி, அ.தி.மு.க தம்பிதுரை என்று கட்சிக்கு ரெண்டுபேரை சொல்லலாம்! அந்த வரிசைக்கு வர ட்ரை பண்ணுகிறா கேப்டனின் வாரிசு விஜய பிரபாகரன் என்று கட்சிக்குள்ளேயே சிலர் முணுமுணுக்கின்றனர்.

  கடந்த இரண்டு நாட்களாக  பல்வேறு கட்சி தலைவர்களும் கேப்டனின் வீட்டுக்கு சென்று ‘திடீர்’நலம் விசாரிப்பு காட்சிகளை பிரேக்கிங் நியூஸ்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்று நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் அப்படிதான் நலம் விசாரித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

  vijayakanth

  இதை அரசியல் கூட்டணிக்கான சந்திப்பில் அரசியல் இல்லை என்று ரஜினியும், ஸ்டாலினும் பேட்டி கொடுத்து விட்டு போக, இந்த சந்திப்புகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கானதுதான் என்று சொல்லியிருக்கிறார் விஜய பிரபாகரன்.

  நேற்று தே.மு.தி.க -நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விஜயபிரபாகரன் தேர்ந்த அரசியல்வாதி போல் முதல் நிகழ்ச்சியாக அண்ணா சிலைக்கு மாலையை போட்டுவிட்டுதான் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு கடைசியாக தனது கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

  vijayaprabakaran

  டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசியவர் தொடர்ந்து, ‘நமது கட்சியை சேர்ந்தவர்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தே.மு.தி.க.வின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது. வரும் காலத்தில் விஜயகாந்த் ஆட்சி இல்லையென்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போலதான் வருவார், ஆனால்,பன்றிகள்தான் கூட்டமாக வரும்; எங்களுக்கு 2 சதவிகித வாக்குகள்தான் இருக்கு என்று சொல்லுகிறவர்கள்,ஏன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறீர்கள்!? வருகிற எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை’ என்று காரசாரமாக பேசினார்.

  தொடர்ந்து பேசிய அவர், ‘இப்போது இருப்பவர்களைப்போல் வாயை மூடிக்கொண்டு சுத்துற ஆள் விஜயகாந்த் இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்த திட்டங்களை செய் என்று டெல்லிக்கு குரல் கொடுக்க தமிழ்நாட்டில் சரியான தலைவர்கள் இல்லை. அப்படியொரு தலைவரை கொண்டு வரவேண்டும்’ என்று தொண்டர்கள் மத்தியில் அனல் பறக்கும் வசனங்களை அள்ளி  விட்டார் நம்ம கேப்டனின் வாரிசு. 

  என்னய்யா இப்படி மாத்தி மாத்தி பேசி கடுப்பேத்துறீங்கன்னு முரசு கட்சிக்குள்ளையே சிலர் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்களாம்…