2 ஆண்டுகள் கழித்து சீமான் மீது வழக்குப்பதிவு…காரணம் இதுதானாம்!

  0
  2
  சீமான்

  தமிழக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது

  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  ttn

  கடந்த 2018 ஆம் ஆண்டு காமராஜர் நினைவு நாளையொட்டி சென்னையில் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில்  மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ என்றும், சேகுவேரா என்றும் அழைத்துக்கொள்கின்றனர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,  இந்த மாதிரி பேசுவதை கேட்கக்கூடாது என்று  தான் அவர்கள் முன்பே இறந்துவிட்டார்கள்’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  தமிழக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்றார்கள். ஆனால்  அதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. அழுத்தம் கொடுக்கிறோம் என்கிறார்கள், அழுத்தம் என்றால் என்ன?  எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்; இது ஒரு வேடிக்கை விளையாட்டு இதைதான் நாம ரசிச்சிகிட்டு இருக்கோம் என்றார்.

  ttmn

  இந்நிலையில் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாகச்  சீமான் மீது  கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இருபிரிவினரிடையே அமைதியைச் சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.