18 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் ராஜா !

  0
  27
  நடிகர் ராஜா

  1984 முதல் 2000ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் வலம் வந்த வெங்கடேஷ் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் ராஜா 18 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார். 

  1984 முதல் 2000ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் வலம் வந்த வெங்கடேஷ் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் ராஜா 18 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார். 

  raja

  1984ம் ஆண்டு வெற்றி படம் முதல் 2000ம் ஆண்டு கண்ணுக்கு கண்ணாக படம் வரை நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ராஜா. கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, மாப்பிள்ளை, புது வசந்தம், வா அருகில் வா, கருத்தம்மா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அருணாசலம போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றி தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியவர் ராஜா. தற்போது தமிழ் உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் ராஜா. இதுகுறித்து ராஜா அளித்த பேட்டியில், 18 ஆண்டுகள் கழித்து நடிப்பதாகவும், வெங்கடேஷ் என்ற தனது பெயரை சினிமாவுக்காக இயக்குனர் பாரதிராஜா மாற்றி வைத்து ‘கடலோர கவிதைகள்’ படத்தில் அறிமுகம் செய்ததாக குறிப்பிட்டார். பாரதிராவின் நிறைய படங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கும் ராஜழ 18 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா உலகிற்கு வந்தது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார். கடைசியாக நடிகர் முரளி அவர்கள் நடித்த ‘கண்ணுக்கு கண்ணாக’ படத்தில் தான் நடித்தேன் என்றம் அதன் பிறகு போதிய பட வாய்ப்பு இல்லாமல் தன்னுடைய மார்பிள் தொழிலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போதுதான் ஆதித்ய வர்மா படத்தோட வாய்ப்பு நடிகர் விக்ரம் மூலம் தான் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். 

  raja

  மேலும் நடிகர் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தைப் பற்றி தன்னிடம் சொல்லி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா? என கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவக்காமல் உடனே சம்மதித்து விட்டதாகவும் தெரிவிக்கும் ராஜா, சினிமா உலகில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக விக்ரம் வந்த நாள் முதலே அவரை பற்றி தெரியும் என கூறினார். ‘ஆதித்ய வர்மா’ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் விக்ரம் இருப்பார். எப்படி நடிக்கணும், எப்படி சொல்லனும்னு எல்லாமே எனக்கு சொல்லிக் கொடுப்பார். விக்ரம் பக்கத்தில் இருந்தால் ஏதோ ஒரு பெரிய நம்பிக்கை கொடுக்கிற மாதிரி இருப்பதாகவும், ஆதித்ய வர்மா படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பார்க்கும் ரசிகர்களுக்கு தமிழில் பார்க்கும் போது ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என நான் நம்புகிறேன். மேலும் சின்ன சின்ன டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் நடிகர் விக்ரம் தெரிந்து வைத்துள்ளதாக குறிப்பிடும் ராஜா, நான் சினிமா துறையில் நடிக்க வந்த போது எனக்குள்ள இருந்த தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் உடைத்தவர் அவர் தான் என பெருமிதம் கொள்கிறார் ராஜா.