17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கன்னத்தில் முத்தமிட்டால் ஜோடி! குஷியில் ரசிகர்கள்!

  0
  19
  மாதவன்- சிம்ரன்

  17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாதவன்- சிம்ரன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துத்திருப்பதை மகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளனர். 

  சென்னை: 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாதவன்- சிம்ரன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துத்திருப்பதை மகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளனர். 

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2002ம் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை 90’ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்ததிருக்க முடியாது. அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் நடித்துத்திருந்த மாதவன்- சிம்ரன் ஜோடி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை அழகாக வெளிக்காட்டியதே ஆகும். 

  தற்போது அந்த படம் வெளியாகிக் கிட்டத் தட்ட 17 ஆண்டுகள் கழிந்த பிறகும் இவர்களின் ஜோடி மீண்டும் வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் கோரிக்கை ஏற்ப இவர்களின் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. ஆம்… நடிகர் மாதவன் இயக்கி, நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’15 ஆண்டுகளுக்குப் பிறகு திருவும், இந்திராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராணயனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.