16 குழந்தைங்க… மீண்டும் கர்ப்பம்.. வீட்டிலேயே பிரசவம்… அதிர்ச்சியளிக்கும் இந்திய பெண்!

  0
  1
  குழந்தை

  உலக நாடுகள் எல்லாம் இந்தியாவுன் போட்டியிட முடியாமல் ஜனத்தொகையில் பின்னுக்கு போய்விட்டது. ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே நம் நாட்டின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த `நாம் இருவர்… நமக்கு இருவர்’ என்று பிரச்சாரங்களை ஆரம்பித்து வைத்தது அரசு. அதன் பின்பும் அதிகரித்து வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த செய்வதறியாது `நாம் இருவர் நமக்கு ஒருவர்’  என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்தது.

  உலக நாடுகள் எல்லாம் இந்தியாவுன் போட்டியிட முடியாமல் ஜனத்தொகையில் பின்னுக்கு போய்விட்டது. ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே நம் நாட்டின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த `நாம் இருவர்… நமக்கு இருவர்’ என்று பிரச்சாரங்களை ஆரம்பித்து வைத்தது அரசு. அதன் பின்பும் அதிகரித்து வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த செய்வதறியாது `நாம் இருவர் நமக்கு ஒருவர்’  என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்தது. எனக்கு நீ குழந்தை, உனக்கு நான் குழந்தை.. நமக்கெதற்கு இன்னொன்று’ என்று அலறியடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிற நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்நிலையில், 20 வது முறையாக கர்ப்பம் தரித்து ஆச்சர்யத்தில் உறைய வைத்திருக்கிறார் இந்திய பெண் ஒருவர்.

  pregrant women

  மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற பெண். 38 வயதான இவருக்கு 16 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் 11 குழந்தைகள் தான் தற்போது உயிருடன் இருப்பாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லங்காபாய் காரத்துக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தற்போது 20 வது முறையாக மீண்டும் கர்ப்பமான லங்காபாய் காரத், இதுவரை எந்த குழந்தைக்காகவும் மருத்துவமனை சென்று பிரசவம் பார்த்துக் கொண்டதே இல்லையாம். அவரது அனைத்து பிரசவங்களுமே வீட்டில் தான் நடைபெற்றுள்ளன. இவர்கள் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலியாக சிறிய வேலைகளை செய்வதால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து கொண்டே இருந்துள்ளனர். அதனால் சுகாதாரத்துறை அதிகாரிகளால் லங்காபாயை கண்டறிய முடியவில்லை. 

  அது சரி.. ஒரு பிரசவத்தையாவது மருத்துவமனையில் பார்த்திருந்தால் அதோடு குழந்தைப் பெற்றுக் கொள்வதை நிறுத்தியிருப்பார் என்று படித்து முடிச்சதும் நீங்க புலம்புறது இங்கே வரைக்கும் கேட்குது…!