157 நாட்களில் மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்!

  0
  3
  ரவுடி பேபி

  மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. 

  சென்னை: மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. 

  நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

  10 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன்- தனுஷ் காம்போவில் உருவான இப்படத்தில், இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனுஷ் எழுதி பாடிய  இப்பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த நிலையில் இப்பாடல் யூடியூப்பில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறது. 

  rowdy baby

  அந்த வகையில் தற்போது 157 நாட்களில் யூடியூப்பில் 500 மில்லியன் முறை பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிவிரைவில் 500 மில்லியன் கடந்த பாடலில் ரவுடி பேபி இரண்டாவது இடத்தை தட்டிச்சென்றுள்ளது.

  இந்த செய்தியை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ‘இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் இன்னும் ஆறு மாதங்களில் 1000 மில்லியன் பார்வையாளர்களையும் இந்த பாடல் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.