15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

  0
  6
  பாலியல் வன்கொடுமை

  உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயதான பள்ளி மாணவி சி.ஆர்.பி.எப் வீரர்களால் கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாலியா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்ற 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள், அவரது அம்மாவை மிரட்டி வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர். வெளியே வந்த அந்த மாணவியின் தாய், பயத்தில் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதற்குள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு சி.ஆர்.பி.ஆப் வீரர்கள் வீட்டிற்கு பின்புறமிருந்த வனப்பகுதிக்குள் சென்றனர்.

  rape

  மாணவியின் அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்த மாணவியை வீட்டருகே விட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி மாணவியின் தாயாரும், அப்பகுதி மக்களும் ஹாலியா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.