15 வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ‘எஸ்ஆர்எம் கல்லூரி’யில் தொடரும் மர்மங்கள்!

  0
  1
  தற்கொலை

  எஸ்.ஆர்.எம் கல்லூரியின்  மாடியிலிருந்து குதித்து  மாணவர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை: எஸ்.ஆர்.எம் கல்லூரியின்  மாடியிலிருந்து குதித்து  மாணவர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  srm

  இந்திய ஜனநாயக கட்சி தலைவரும்  மக்களவை எம்பியுமான  பச்சமுத்துவுக்கு சொந்தமானது எஸ்ஆர்எம் கல்லூரி. சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள இந்த கல்லூரியில் ஐ.டி.பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகவன். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர் இன்று கல்லூரியின் 15 வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவன்  ராகவனின் திடீர் தற்கொலை கல்லூரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  suicide

  ஏற்கனவே இந்த கல்லூரியில் கடந்த மாதத்தில் திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீண்டும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கல்லூரியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.