15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கூகுள் மேப்ஸ்…புதிய அம்சங்கள் அறிமுகம்!

  0
  1
  google maps

  பிரபல கூகுள் மேப்ஸ் தனது 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  கலிபோர்னியா: பிரபல கூகுள் மேப்ஸ் தனது 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  கூகுள் நிறுவனம் மேப்ஸ் சேவையை கடந்த பிப்ரவரி 8, 2005-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும் இதில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஏரியல் வியூ காட்சிகள், ரியல்-டைம் டிராஃபிக் நிலவரம், கார் அல்லது பைக் ரூட் பிளானிங், ஸ்ட்ரீட் வியூ என்று பல்வேறு அம்சங்கள் தற்போது கூகுள் மேப்ஸ் சேவையில் இடம்பெற்றுள்ளது. இதனால் தெரியாத இடங்களுக்கும் எளிதில் போய் வரும் வகையில் கூகுள் மேப்ஸ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக மாறியுள்ளது. இந்த நிலையில், கூகுள் மேப்ஸ் தனது 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  maps

  அதன்படி ‘எக்ஸ்புளோர்’ (explore tab) என்ற டேப் மூலம் லைவாக ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது அந்தந்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள், திரையரங்குகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நுட்பமாக கண்டறிந்து காண்பிக்கும். டிரைவிங் மூலமாகவோ அல்லது பொது போக்குவரத்து மூலமாகவோ வேலைக்கு செல்லும் அல்லது வீட்டிற்கு வரும் வழியை வேகமாக அடைய கம்யூட் (Commute tab) என்ற டேப் உதவி செய்யும். கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் கூகுள் மேப்ஸ் சேவையின் 30 லட்சம் தவறான தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன. அவற்றை நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய லோகோ, புத்தம் புதிய லுக் போன்ற மாற்றங்களும் கூகுள் மேப்ஸ் சேவையில் செய்யப்பட உள்ளன.