15 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வழங்கும் நிலையில் உத்தர பிரதேச அரசு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்…

  0
  3
  முதல்வர் யோகி ஆதித்யநாத்

  உத்தர பிரதேச அரசு 15 லட்சம் பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கும் நிலையில் உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

  உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெறுகிறது. முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: 2017ம் ஆண்டுக்கு முன் உத்தர பிரதேசம் வேலைவாய்ப்பின்மைக்கு ஆளானது. ஆனால் பா.ஜ.க. ஆட்சி அமைத்த பிறகு சூழ்நிலை மாறி விட்டது. ஆட்சி அமைத்தபிறகு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகியது.

  வேலைவாய்ப்பு

  வேலையின்மை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நீங்கள் கூறும் தொழிலாளர்களுக்கும் இங்கு வேலை கிடைக்கும். இங்கு சாத்திய கூறுகளுக்கு பஞ்சமில்லை. சவால்கள் உள்ளன ஆனால் ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. லாக்டவுன் காலத்தில் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் வீடுகளுக்கு டெலிவரி செய்வது வாயிலாக சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  தொழிலாளர்களுக்கு மருத்து பரிசோதனை

  15 லட்சம் பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கும் நிலையில் நாங்கள் உள்ளோம். பா.ஜ.க. அரசு வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் வைத்திருக்கிறது மற்றும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. கட்டாய தனிமைப்படுத்துதல் காலமான 14 நாட்களை நிறைவு செய்தவுடன் அவர்களுக்கு ரூ.1,000 மற்றும் உணவு பொருட்கள் வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.