144 தடை மீறல்: தென்காசியில் 300 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

    0
    1
    வழக்குப்பதிவு

    தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதால், மக்கள் அதன் பாதிப்பை உணராமல் வெளியே சுற்றித் திரிகின்றனர். 

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறி வெளியே செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதால், மக்கள் அதன் பாதிப்பை உணராமல் வெளியே சுற்றித் திரிகின்றனர். 

    ttn

    இந்நிலையில் தென்காசியில் தடையை மீறி வெளியே சுற்றித் திரிந்த 300 இரு சக்கர வாகனங்கள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.