13 நாட்களுக்கு பிறகு ஜம்முவில் மீண்டும் தொடங்கிய 2ஜி இணைய சேவை!

  0
  2
   2ஜி  இணையதள சேவை

  ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி  இணையதள சேவை மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. 

  ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி  இணையதள சேவை மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. 

  ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இணையதள சேவை கடந்த 5 ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் மக்கள் நடமாட்டத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 

  jammu

  இந்நிலையில்  .ஜம்மு, ரியாசி, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் ஆகிய  5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி ரக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும் காஷ்மீரில் தொடர்ந்து இணையதள சேவை முடங்கிப் போயுள்ளது. 

  jammu

  முன்னதாஜம்மு-காஷ்மீர் பகுதியில் தொலைத் தொடர்பு விரைவில் சீர் செய்யப்படும் என்று ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.