12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  0
  1
  கனமழை

  12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  rain

  வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்துவருகிறது . குறிப்பாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. விருகம்பாக்கம், போரூர், அண்ணா நகர்,  மீனம்பாக்கம், செம்பரம்பாக்கம், குரோம்பேட்டை, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை  தொடர்ந்து பெய்து வருகிறது. இதேபோல் சென்னையை அடுத்த செங்குன்றம்,  மாதவரம், சோழவரம், , புழல், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

  rain

  இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக  மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் காற்றானது  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.