119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை! கிணற்றில் வீசிய கொடூரம்!

  0
  2
  மெக்சிகோ

  வன்முறை சம்பவங்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகின்றது. தொழில் நுட்பமும், அறிவியலின் வளர்ச்சியும் உலகம் முழுக்கவே அதிகரித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும், கொலை, கொள்ளைகளும் அதே விகிதத்தில் அதிகரித்து அதிர்ச்சியைத் தருகிறது. இளம் வயதிலேயே சிறுவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப் பொருள் கும்பல்களின் வன்முறை களமாக நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 

  dead body

  இந்த நகரில், தொழில் போட்டி காரணமாக போதைப் பொருட்களைக் கடத்தும் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இவர்களின் மோதல்களினால் இந்த நகரில் பலர் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அந்த நகரில் உள்ள பாழுங்கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதையடுத்து, கிணற்றில் சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். 

  mexico

  மனித உடல் பாகங்கள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல் பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுனர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.